|
உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் மேலாண்மை
பால் கறப்பதற்கான முக்கிய தேவைகள் |
பால் கறப்பதற்கான முக்கிய தேவைகள் |
|
- பால் கறப்பது என்பது ஒரு கலையாகும்.இதற்கு முன் அனுபவமும், த நுட்பமும் தேவை
- மென்மையாகவும், அமைதியாகவும்,வேகமாகவும்,சுத்தமாகவும், முழுமையாகவும் பாலைக் கறக்கவேண்டும்
- உணர்ச்சிவசப்பட்ட முரட்டுத்தனமாக கையாளப்படும் மாடுகளை விட மென்மையாகக் கையாளப்பட்ட மாடுகள் அதிக பால் கொடுக்கும்
- பால் கறக்கும் கொட்டகைகளைச் சுத்தமாக வைத்திருப்பதால் மடியில் ஆரோக்கியம் நன்றாக இருப்பதோடு, மாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்
- 5-7 நிமிடங்களுக்குள் பால் கறந்து முடித்து விட வேண்டும்
- பாலை முழுமையாகக் கறந்து விட வேண்டும். பாலை முழுவதும் கறக்காமல் இருந்தால் மடியில் பால் தேங்கி மடிநோய் ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து மடி நோய் ஏற்பட வழிவகுக்கும்
|
|
பசு மாடுகள் மற்றும் கொட்டகையினை பால் கறக்க தயார் செய்தல் |
- ஒவ்வொரு முறை பால் கறந்த பின்பு பால் கறக்குமிடத்தை நன்றாக கழுவி,சுத்தம் செய்து,அடுத்த முறை பால் கறக்கும்போது சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
- பால் கறக்கும் கொட்டகையில் மாடுகளுக்கு தூளான தீவனம், மற்றும் ஊறுகாய் புல்லை அளிப்பது போன்றவற்றை தவிர்க்கவேண்டும்
- மாடுகளில் பாலைக் கறப்பதற்கு முன்பு அவற்றின் மடி, மடிக்காம்புகள், மற்றும் தொடைப்பகுதியை தண்ணீர் கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்
- மாடுகளின் மடிப்பகுதியில் அதிகமாக முடி இருந்தால் அவற்றை வெட்டிவிட வேண்டும்
- எருமை மாடுகளை பால் கறப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும்
- பால் கறக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக மாடுகளின் மடியை சுத்தமான ஈரமற்ற துணியால் துடைக்கவேண்டும்
- வீரியம் குறைந்த கிருமி நாசினிக் கரைசலில் மடிக்காம்புகளை முக்கி எடுக்கவேண்டும்
- குளிர் காலங்களில் வெதுவெதுப்பான கிருமிநாசினிக் கரைசலை உபயோகிக்கவேண்டும்
|
பால் கறப்பதற்குத் தயாராதல் –பால் கறப்பவர் மற்றும் பால் கறக்கும் பாத்திரத்தைத் தயார் செய்தல் |
|
- பால் கறப்பவரின் கைகள் மற்றும் பால் கறக்க உதவும் பாத்திரங்கள் போன்றவற்றை பால் கறப்பதற்கு முன் நன்றாகக் கழுவ வேண்டும்
- பால் கறப்பவர் சுத்தமான துணிகளை அணிந்திருக்க வேண்டும்.அவர்கள் தங்களது தலையில் தொப்பி அணிந்திருக்க வேண்டும்.இதனால் அவர்களது தலையிலிருந்து விழும் முடி பாலுக்குள் விழாமல் இருப்பதைத் தடுக்கலாம்
- பால் கறப்பவர் தங்களது நகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெட்டி, மென்மையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
- பால் கறப்பவர்கள் பால் கறப்பதற்கு முன்னும் பின்னும் தங்களது கைகளை கிருமி நாசினிக் கரைசல் கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்
|
|
|
1.கைகளின் மூலம் பால் கறத்தல்
2. இயந்திரங்களின் மூலம் பால் கறத்தல்
|
1. கைகளின் மூலம் பால் கறத்தல் |
|
- கைகளின் மூலம் பால் கறக்கும் முறை இந்தியாவில் பொதுவாகப் பின்பற்றப்படும் முறையாகும்
- மாடுகள் அவற்றின் இடது பக்கத்தில் பால் கறக்கப்படுகிறது
- ஸ்ட்ரப்பிங் எனும் இழுத்தல் மற்றும் முழுக்கைகளால் பால் கறத்தல் எனும் இரண்டு முறைகளில் பொதுவாக பால் கறக்கப்படுகிறது
- கைகளைப் பயன்படுத்தி பால் கறப்பதில் இரண்டு முறைகள் உள்ளன
- ஈரக்கைகளால் பால் கறத்தல்
- உலர்ந்த கைகளால் பால் கறத்தல்
|
|
|
அ. ஈரக்கைகளால் பால் கறத்தல் |
- இம்முறையில் பால் கறக்கும் போது பால் கறப்பவர் தன்னுடைய கைகளை தண்ணீர் அல்லது எண்ணெய் பூசிக்கொண்டு பால் கறப்பதாகும்.இதனால் மாடுகளின் மடிக்காம்புகள் உலர்ந்தும்,வெடித்தும் காணப்படும்
- மடிக்காம்பில் வெடிப்புகள் மற்றும் புண்கள் ஏற்பட்டு மாடுகளுக்கு வலி ஏற்படும்
- இவ்வாறு பாதிக்கப்பட்ட மாடுகளில் பால் கறந்தவுடன் அவற்றின் மடிக்காம்பில் கிருமி நாசினி கலந்த கிரீம் தடவ வேண்டும்
|
ஆ. உலர்ந்த கைகளால் பால் கறத்தல் |
|
- இந்த முறையில் பால் கறக்கும்போது பால் கறப்பவரின் கைகளிலோ அல்லது மாடுகளின் மடிக்காம்பிலோ எண்ணெய் அல்லது எந்தப்பொருளும் தடவி பால் கறக்கப்படுவதில்லை
- இம்முறை பால் கறப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். ஏனெனில் இது மாடுகளின் மடிக்காம்பில் வலியையோ அல்லது வெடிப்பகளையோ ஏற்படுத்துவதில்லை
- உலர்ந்த முறையில் பால் கறப்பதில் 5 வகைகள் உள்ளன
- முழுக்கைகளால் பால் கறத்தல்
- கைகளால் இழுத்து பால் கறத்தல்
- மடிக்காம்புகளை அழுத்தி பால் கறத்தல்
- மடிக்காம்புகளை பம்பு போல் அழுத்தி பால் கறத்தல்
- கிள்ளுவது போன்று பால் கறத்தல்
|
2.இயந்திரங்களின் மூலம் பால் கறத்தல் |
|
- மேற்கத்திய மற்றும் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் தற்போது இயந்திரம் மூலம் மாடுகளில் பால் கறப்பது பின்பற்றப்படுகிறது
- வெற்றிடத்தினைப் பயன்படுத்தி, மடிக்காம்புகளுக்கென தயாரிக்கப்பட்ட பம்புகளின் மூலம் பால் கறக்கப்படுகிறது
- இயந்திரத்தலுள்ள பால் கறக்கும் மடி பம்பின் ரப்பர் பகுதிக்கும், அதன் வெளிப்புற மெட்டல் பகுதிக்கும் இடையில் வெற்றிடமும் வளிமண்டல அழுத்தமும் மாறி மாறி பல்சேட்டர் கருவி மூலம் ஏற்படுத்தப்படுகிறது
- மடிக் காம்பு பம்பின் ரப்பர் பகுதிக்கும், மெட்டல் பகுதிக்கும் இடையில் எதிர் மறை அழுத்தம் ஏற்படுத்தப்படும் போது பால் கறக்கப்படுகிறது
- வளி மண்டல அழுத்தம் மடிகாம்பு பம்பின் ரப்பர் மற்றும் மெட்டல் பகுதிக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் போது, பால் கறப்பது நிறுத்தப்பட்டு காம்பு மசாஜ் செய்யப்படுகிறது
- ஆனால் தொடர்ந்து வெற்றிடம் மடிக்காம்பு பகுதியில் இயந்திரத்தால் ஏற்படுத்தப்பட்டால் காம்பில் வீக்கம் ஏற்பட்டு சிவந்து காணப்படும்
|
|
பால் கறக்கும் இயந்திரத்தின் செயல்திறனை பாதிக்கும் காரணிகள் |
|
|
வெற்றிடத்தின் அளவு |
|
- பால் கறக்கும் போது பால் கறக்கும் இயந்திரத்திலுள்ள வெற்றிடத்தின் அளவு மிமி பாதரசம்/கிலோ பாஸ்கல் என்ற அலகால் அளக்கப்படுகிறது
|
பால் கறக்கும் இயந்திரம் பால் கறப்பதற்கு செயல்படும் எண்ணிக்கை |
|
- பால் கறக்கும் இயந்திரத்தின் உள்ளே ஒரு நிமிடத்திற்கு வெற்றிடமும், வளிமண்டலக் காற்றும் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை
- பெரும்பாலான பால் கறவை இயந்திரங்களில் ஒரு நிமிடத்தில் அனுமதிக்கப்படும் வெற்றிடம் வளிமண்டலக் காற்றின் எண்ணிக்கை 40-60 ஆக இருக்கும்
|
பால் கறக்கும் விகிதம் |
|
- பால் கறக்கும் இயந்திரத்தில் வெற்றிடம் மற்றும் வளிமண்டல காற்று அனுமதிக்கப்படும் கால அளவு முறையே 60;40 ஆகும்
|
பால் கறக்கும் இயந்திரத்தை உபயோகப்படுத்தும் போது கடைபிடிக்கப்பட வேண்டியவை |
- பால் கறவை இயந்திரம் மூலம் பால் கறப்பதற்கு முன்னால் மாடுகளின் மடி மற்றும் மடிக்காம்புகளை துடைத்து ஒரு ½ நிமிடம் முதல் 1 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்யவேண்டும்
- இளஞ்சூடான கிருமிநாசினிக்கரைசலில் ஒரு சுத்தமான துணியை நனைத்துப் பிழிந்து உபயோகப்படுத்தவேண்டும்
- ஸ்டிரிப் கப் பரிசோதனை – ஸ்டிரிப் கப்பை பயன்படுத்தி மாடுகளின் மடிக்காம்பிலிருந்து பாலைக் கறந்து பாலில் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகிறதா என்பதைப் பரிசோதிக்கவேண்டும்
- பாலை அதற்குரிய கப்புகளில் சரியாகக் கறக்கவேண்டும்
- அதிகநேரம் பால் கறக்கும் இயந்திரத்தை உபயோகிப்பதைத் தவிர்க்க அதில் டைமர் கருவியை உபயோகிக்கவேண்டும்
- பால் கறக்கும் இயந்திரத்தை உபயோகித்த பின்பு அதிலுள்ள வெற்றிடத்தை உடனடியாக நீக்கி விட வேண்டும். மடிக்காம்பு பம்பை மாடுகளின் மடியிலிருந்து எடுத்துவிட்டு மடியை மசாஜ் செய்யவேண்டும்
- பிறகு மடிக்காம்புகளை கிருமிநாசினிக் கரைசலில் முக்கி எடுக்கவேண்டும்
- கறந்த பாலை எடை போட வேண்டும்
- ஒவ்வொரு முறை பாலைக் கறந்த பின்பும் பால் கறவை இயந்திரத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்
- பால் கறவை இயந்திர உற்பத்தியாளர் அறிவுரைப்படி பால் கறவை இயந்திரத்தை உபயோகிக்க வேண்டும்
|
|
- மாடுகளில் பால் கறக்கும் கால அட்டவணை முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.அடிக்கடி பால் கறக்கும் நேரத்தை மாற்றக்கூடாது. அவ்வாறு ஏதேனும் மாற்றம் செய்தால் மாற்றத்தை சிறிது சிறிதாக செய்ய வேண்டும்
- பால் கறக்கும் கொட்டகையை சுத்தமாக வைதிருக்கவேண்டும்.பால் கறப்பதற்கு ½ மணி நேரத்திற்கு முன்பாக இக்கொட்டகையை சுத்தம செய்துவிட வேண்டும்
- பால் கறக்க உபயோகிக்கும் பாத்திரங்கள் மற்றும் கேன்களை சுத்தமாகக் கழுவி உலர வைத்து உபயோகப்படுத்த வேண்டும்
- பால் கறக்கும் பாத்திரங்களும்,கேன்களும் உருளை வடிவத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.அவற்றில் ஒட்டுகள் எதுவும் இருக்கக்கூடாது
- பால் கறப்பதற்கு முன்பு பாத்திரங்களை சூடுபடுத்துவதால்,பால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம்
- மாடுகளின் மடியை பொட்டாசியம் பர்மாங்கனேட் துகள்கள் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்
- மடியைக் கழுவும் போது மசாஜ் செய்ய வேண்டும்
- பால் கறப்பவர் தன்னுடைய சுகாதாரத்தின் முக்கியத்தன்மையை அறிந்திருப்பவராக இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.பால் கறப்ப்பவரின் கைகள் சுத்தமாகவும், கை விரல்களில் நகங்கள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்
- மடிக்காம்பின் நுனியிலிருந்து மடி முழுவதையும் சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்
- முழுக்கைகளால் மாடுகளில் பால் கறப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பால் கறப்பதை விரைவாகவும்,முழுமையாகவும்,மாடுகளுக்கு வசதியாக இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.பால் கறக்கும்போது மடிக்காம்புகளை மென்மையாக அழுத்தி பால் கறக்கவேண்டும்.மடிக்காம்புகளை இழுக்கக்கூடாது
- மடியைக் கழுவுவது முதல் பால் கறந்து முடிப்பது வரை 8 நிமிடத்தில் முடித்துவிட வேண்டும்
- பால் கறந்தவுடன் மடிக்காம்புகளை ஒரு கிருமி நாசினிக் கரைசலில் முக்கி எடுக்க வேண்டும்
- இதமான இசை இருக்கும்,அமைதியான சூழ்நிலையில் மாடுகளில் பால் கறக்கவேண்டும்
- கன்று ஈன்ற சில நாட்களான மாடுகள் அதிகமாக பால் உற்பத்தி செய்யும். இம்மாடுகளில் பாலை முதலில் கறந்து விட்டு மற்ற குறைவாக பால் உற்பத்தி செய்யும் மற்றும் கறவைக் காலத்தின் கடைசி நிலையிலுள்ள மாடுகளில் பாலைக் கறக்கவேண்டும்
- மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் கடைசியாகப் பாலைக் கறக்கவேண்டும்
- 10 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் கறக்கவேண்டும். 12-15 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் ஒரு நாளைக்கு மூன்று முறை பால் கறக்கவேண்டும்
- பால் உற்பத்தி 16 லிட்டருக்கும் மேல் இருக்கும் கறவை மாடுகளில் பால் கறக்க இரண்டு பேரை நியமிக்கவேண்டும்
- சிகிச்சை அளிக்கப்பட்ட மடிக்காம்பிலிருந்து கறக்கப்படும் பாலை மற்ற பாலுடன் கலக்கக்கூடாது
- ஒரு சுத்தமான மஸ்லின் துணியால் அல்லது மெல்லிய நைலான் வலையால் பாலை வடிகட்ட வேண்டும்
- பாலை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன்னால் குளிர்வித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு செல்ல வேண்டும்
- பால் நுண்ணுயிரிகள் வளர்வதற்கு சரியான ஊடகமாகும்.சிறிதளவு அசுத்தமடைந்தாலும் பால் மனிதர்கள் குடிப்பதற்கு உபயோகமற்றுப் போய்விடும்
|
சுத்தமான பால் உற்பத்திக்கான வழிமுறைகள் |
|
- பண்ணையிலுள்ள மாடுகளின் ஆரோக்கியம் - பண்ணையிலுள்ள மாடுகள் ஆரோக்கியமாகவும், டியூபர்குளோசிஸ் போன்ற மனிதர்களுக்குப் பரவும் எந்தவித நோய்க்கிருமிகளின் தாக்குதலின்றியும் இருக்கவேண்டும்.ஒவ்வொரு வருடமும் மாடுகளுக்கு தொற்று நோய்களின் தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து, நோய்த் தாக்குதல் இன்றி இருப்பதை உறுதி செய்து கொள்ள்வேண்டும்
- சுத்தமான மாடுகள் - பால் கறப்பவர் மாடுகளின் அடிவயிறு, மடி, தொடை போன்ற பகுதிகளைப் பால் கறப்பதற்கு முன்பு சுத்தமாகக் கழுவி விட வேண்டும்.இதனால் பால் கறக்கும்போது பாலில் தூசுகள் விழுவது தடுக்கப்படும்.
- சுத்தமான சுற்றுப்புறம் - பால் கறக்கும்போது மாடுகள் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் தூசுகள் அதிகம் இருந்தால் தண்ணீர் தெளிக்கவேண்டும்
- பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் - மாட்டுப்பண்ணையில் டைபாய்டு,கழிச்சல் மற்றும் இதர தொற்றுநோய்களைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.
- பால் கறப்பவரின் சுகாதாரம் -பால் கறப்பவர்கள் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவும் தொற்று நோய்களின் தாக்குதலின்றி இருக்கவேண்டும். மேலும் சுகாதாரமான பழக்கவழக்கங்களை உடையவராகவும் இருத்தல் வேண்டும். பால் கறப்பவரின் சுகாதாரத்தை அவர் அணிந்திருக்கும் உடைகள், கை விரல்களில் நகங்கள் வெட்டப்பட்டிருத்தல்,எச்சில் துப்பாதிருத்தல் போன்ற பழக்கவழக்கங்களைக் கொண்டு அளவிட வேண்டும்.
- சுத்தமான பாத்திரங்கள் - பால் கறப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் சுத்தமாகவும், நோய்க்கிருமிகளால் அசுத்தமடையாமலும் இருக்கவேண்டும். இதற்காக பாத்திரங்களை உபயோகித்தவுடன் அவற்றைக் கழுவி விட வேண்டும். பிறகு தகுந்த சுத்தப்படுத்தும் பொருட்களைக் கொண்டு கழுவி, சூடான நீரால் கழுவ வேண்டும். சோப்புகளை உபயோகித்து கழுவுவதால் பாத்திரங்களி சோப்புப் படலம் படிந்து விடும். எனவே சோப்புகளை உபயோகிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
- பால் சேகரிக்கும் கேன்களின் வகைகள் an - பால் சேகரிக்கும் அல்லது சேமிக்க மூடியற்ற வாளிகளையோ அல்லது பாத்திரங்களையோ உபயோகிப்பதற்கு பதில் மூடிகள் அரைவட்ட வடிவமாக கோபுரம் போன்று இருக்கும் கேன்களை உபயோகப்படுத்தவேண்டும்.
- பாலை வடிகட்டுதல் - பாலிலுள்ள தூசுகளையும்,இதர படியும் பொருட்களையும் நீக்க பாலை வடிகட்ட வேண்டும். இவ்வாறு பாலை வடிகட்டப் பயன்படுத்தப்படும் துணியை தினமும் சுத்தமாக தண்ணீரில் அலசி, துவைத்து காயவைத்து உபயோகிக்க வேண்டும். இல்லையேல் சுத்தமற்ற துணி பாலை கெட வைத்து விடும்.
- மாடுகளுக்குத் தீவனமளித்தல் - பால் கறப்பதற்கு ½ மணி நேரத்திற்கு முன்பாக மாடுகளுக்குத் தீவனமளிக்க வேண்டும். பால் கறக்கும் போது மாடுகளின் கவனம் சிதறாமல் இருக்க அவற்றுக்கு அதிக தூசுகளற்ற அடர்தீவனத்தை அளிக்கலாம்.
- பாலை முறையாக குளிர்வித்து சேமித்தல் - பாலைக் கறந்த பிறகு அதை உடனடியாக கேன்களில் ஊற்றி, குளிர்காலமாக இருந்தால் கேன்களை குளிர்ந்த நீரில் வைக்கவேண்டும். மாறாக வெயில் காலமாக இருந்தால் பனிக்கட்டி கலந்த தண்ணீரில் வைக்கலாம்.
|
|
மாடுகளின் கொட்டகைகள் மற்றும் பால் கறக்கும் இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்கான எளிய வழிமுறைகள் |
- பால் கறக்கப் பயன்படும் உபகரணங்கள் அழுக்காவதைத் தடுக்க மாடுகளின் சாணத்தை பால் கறப்பதற்கு முன்பாகவும்,பால் கறந்த பின்பும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்
- சில காரணங்களால் பால் கறக்கப் பயன்படும் உபகரணங்கள் அசுத்தமடைந்தால் அவற்றை நன்றாகக் கழுவி பிறகு உபயோகிக்கவேண்டும்
- பால் கறப்பதற்கு முன்பும், பாலை கையாளும்போதும் பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்கவேண்டும். பால் கறப்பவர் அணிந்திருக்கும் உடைகள் சுத்தமானதாக இருக்கவேண்டும்
- ஒவ்வொரு எருமை மாட்டுக்கும் மடியைத் துடைக்க தனித்தனியாக துண்டுகளைத் தனித்தனி வாளிகளில் போட்டு வைத்திருக்கவேண்டும்
- பாலைக் கறந்தவுடன் எப்போதும் மடிக்காம்புகளைக் கிருமிநாசினிக் கரைசலில் முக்கி எடுக்கவேண்டும்
- பால் வைத்திருக்கும் அனைத்து பாத்திரங்களையும் எப்போதும் மூடியிருக்கமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
- சாணத்திற்கு அருகிலோ தீவனமளிக்கும் இடத்திற்கு அருகிலோ பாலை எப்போதும் வைக்கக்கூடாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன
- பால் தீவனம் மற்றும் சாணத்தின் வாசனைகளை உட்கிரகித்துக்கொள்ளும்
- சாணம் மற்றும் தீவனத்திலுள்ள பாக்டீரியாக்களால் பால் அசுத்தமடையும் வாய்ப்பு அதிகம்
- சாணம் மற்றும் தீவனத்திலுள்ள தூசுகள் பாலை அசுத்தமடையச் செய்து விடும்
- நாய்கள், பூனைகள், எலிகள் மற்றும் இதர விலங்குகள் பால் இருக்கும் பாத்திரங்களை நெருங்க அனுமதிக்கக்கூடாது
|
பால் கறப்பதற்கு முன்பு சுகாதாரமான செயல்முறைகளைப் பின்பற்றுதல் |
|
- பால் கறப்பதற்கு முன்பு செய்யப்படும் மாடுகளின் மடியைக் கழுவுதல், பாலை ஸ்டிரிப் கப்பில் கறத்தல் போன்ற மாடுகளில் பால் சுரப்பைத் தூண்டும் செயல் முறைகள் பால் கறப்பதற்கு முன்பு மேற்கொள்ளும் செயல்முறைகளாகும்
- மடியினை சுத்தப்படுத்த ஈரமான துணியைப் பயன்படுத்தவேண்டும்
- ஒவ்வொரு எருமைக்கும் மடியைச் சுத்தப்படுத்த தனித்தனியாக துண்டுகளைப் பயன்படுத்தவேண்டும். மடியில் தண்ணீரை வேகமாக அடிக்கக்கூடாது
- பால் கறப்பதற்கு முன்பாக எருமைகளைத் தயார் செய்வதற்கும்,அவற்றுக்கு மடி நோயின் தாக்குதல் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கும் பால் கறப்பதற்கு முன்பான செயல்முறைகள் அவசியமாகும்
- பாலை பரிசோதிக்க அதனை ஸ்டிரிப் கப்பில் மட்டுமே கறக்கவேண்டும்.தரையில் கறந்துவிடக் கூடாது. பாலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவதற்கே பாலை ஸ்டிரிப் கப்பில் கறக்கவேண்டும்
- மேலும் இதனால் நோய் உண்டாக்கும் கிருமிகள் பரவுவதும் தடுக்கப்படுகிறது. முழுக்கைகளைப் பயன்படுத்தி, உலர்ந்த கைகளால் பாலை பரிசோதனைக்காக கறக்கவேண்டும்
- தேவைப்பட்டால்,ஒரு எருமையில் பாலைக் கறந்துவிட்டு மற்றோர் எருமையிடம் பால் கறக்கச் செல்லும்போது பால் கறப்பவர் கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்லவேண்டும்
|
|
பாலைக் கறந்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரமான முறைகள் |
- பாலைக் கறந்தவுடன் மடிக்காம்புகளை கிருமிநாசினிக் கரைசலில் முக்கி கிருமிநீக்கம் செய்துவிட வேண்டும்.இதனால் மடிக்காம்பில் நுழையும் மடிநோய் விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும்
- பால் கறந்து முடித்த சிறிது நேரத்திற்கு மடிக்காம்பின் நுனிப்பகுதி திறந்தே இருக்கும். இதனால் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மடியினுள் உட்செல்ல வசதி ஏற்படுகிறது
- மடிக்காம்பினை முக்கி எடுக்கப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிக் கரைசலை சிறிதளவு வழவழப்புத்தன்மையுடைய பொருட்களை சேர்ப்பதால் மடிக்காம்பில் விரிசல்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, புண்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்
- பால் கறந்த ½ மணி நேரத்திற்கு மடிக்காம்புகள் திறந்திருப்பதால் எருமைகளை பால் கறந்தவுடன் படுக்க அனுமதிக்கக்கூடாது
- இதற்காக பால் கறந்தவுடன் மாடுகளுக்கு போதுமான அளவு தீவனத்தைப் போட வேண்டும்
- பால் கறக்கும் உபகரணங்களைக் கழுவுவதற்கெனப் பயன்படுத்தப்படும் சுத்தப்படுத்தும் கரைசலை சரியாகப் பயன்படுத்தி உபகரணங்களைக் கழுவவேண்டும்
- பால் கறக்க உபயோகிக்கப்படும் அனைத்து பாத்திரங்கள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகித்தவுடன் அவற்றின் உள்ளேயும் வெளியேயும் நன்றாகக் கழுவ வேண்டும்
- பாலைக் கறந்தவுடன் அதை மூடியுடன் கூடிய வாளிகளில் ஊற்றி,அந்த வாளியை குளோரைடு கலந்த தண்ணீரில்,அடுத்த முறை பால் கறக்கும்வரை வைத்திருக்கவேண்டும்
|
பால் கறக்கும் வழக்கம் |
- பால் கறப்பதற்கு தினசரி சரியான நேரத்தைப் பின்பற்றுவது சுகாதாரமான பால் உற்பத்திக்கும், இதர உற்பத்தி சார்ந்த காரணங்களுக்காவும், பால் கறப்பவருக்கும், மாட்டிற்கும் வசதியான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கும் துணைபுரிகிறது
- பால் கறக்கும் போது சுகாதாரமான முறைகளைக் கையாள்வதும், எருமைகளைப் பால் கறக்கும் நேரத்திற்கு பழக்குவதும், பால் கறப்பவருக்கு வசதியாக இருக்கிறது
- கறவை மாடுகளில் பால் கறக்கும் நேரத்தை முறையாகப் பின்பற்றுவது அதிக பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்
- கை மூலம் பால் கறந்தாலோ அல்லது இயந்திரத்தின் மூலம் பால் கறந்தாலோ பால் கறக்கும் நேரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்
- ஒவ்வொரு முறை பால் கறப்பதற்கு முன்பாகவும் பால் கறக்கும் இயந்திரத்தை அதன் உற்பத்தியாளர்கள் கூறிய அறிவுரைகளின் படி பரிசோதித்த பின்பே பால் கறக்க வேண்டும்
- பால் கறக்க ஆரம்பிக்கும் போது எருமைகளைக் கட்டி பிறகு தீவனம் அளிக்கவேண்டும்
- பால் கறக்கும் கொட்டகையிலிருந்து சாணத்தை பால் கறப்பதற்கு முன்பாக எடுத்து சுத்தம் செய்யவேண்டும்
- பால் கறப்பதற்கு முன்பு கைகளை சோப் கொண்டு கழுவி சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்
- பால் மடியையும் மடிக்காம்புகளையும் துணியைக் கொண்டு நன்றாகத் துடைத்து மசாஜ் செய்யவேண்டும்
- எருமைகளில் பாலை முதலில் கறந்து பாலில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்
- பால் கறவை இயந்திரத்தினை எருமைகளின் மடியில் பொருத்தி அதன் டியூப்கள் சரியாக பொருந்தியிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்
- ஒவ்வொரு முறை பால் கறக்கும் இயந்திரத்தை எருமைகளின் மடியில் பொருத்தும் போதும் எருமைகளுக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்
- இயந்திரத்தைப் பயன்படுத்தி பாலைக் கறந்த பிறகு எருமைகளின் மடியினைப் பரிசோதித்து அதில் பால் இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும்
- பிறகு பால் கறவை இயந்திரத்தின் மடியில் பொருத்தும் பாகங்களை எடுத்து விட வேண்டும்
- பால் மடியின் காம்புகளை கிருமிநாசினிக் கரைசலில் முக்கி எடுக்க வேண்டும்
- பால் கறக்கும் அறையில் பால் கறக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களையும் நன்றாக சுத்தம் செய்யவேண்டும்
- பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்தி பாலைக் கறப்பதற்கு முன்பாக பால் கறவை இயந்திரம் யில் மடியில் பொருத்துவதற்கு ஏற்றவாறு தயார் நிலை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்
- எனவே பாலைக் கறப்பதற்கு முன்பாக அனைத்து எருமைகளையும் நன்றாக கழுவி சிறிதளவு பாலைக் கறந்து பரிசோதித்து விட்டுப் பிறகு பாலைக் கறக்கவேண்டும்
- ஆனால் எல்லா எருமைகளையும் முதலில் கழுவி முதலிலேயே பாலைக் கறக்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது
- பால் சுரப்பினைத் தூண்டும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் குறைவான நேரத்தில் எருமைகளின் உடலில் சுரக்கும். எனவே இந்த ஹார்மோன் சுரக்கும்போது பால் கறவை இயந்திரத்தை உபயோகித்து பாலைக் கறக்காவிட்டால் மீண்டும் அரை மணி நேரம் கழித்தே பாலைக் கறக்க ஆரம்பிக்கவேண்டும்
- பால் கறப்பதற்கு முன்பு மாட்டின் மடி மற்றும் வயிற்றுப் பகுதியினை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும்
- பால் கறக்கும் இடத்தில் தூசுகள் அதிகம் காணப்பட்டால், பால் கறப்பதற்கு முன்பு அவ்விடத்தில் தண்ணீர் தெளிக்கவேண்டும்
- பால் கறப்பவர் எந்த வித தொற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது. மேலும் அவர் சுகாதாரமான பழக்கவழக்கங்களை உடையவராக இருக்கவேண்டும். இதை அவர் அணிந்திருக்கும் உடைகள், நகங்கள் வெட்டியிருத்தல், பால் கறக்கும் போது எச்சில் துப்பாமை, பேசாதிருத்தல் போன்ற பழக்கவழக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
- பால் கறப்பதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பாத்திரங்களையும் அவற்றை உபயோகப்படுத்திய பின்பு உடனே குளிர்ந்த தண்ணீரால் அலசி விட்டு பிறகு நன்றாக கழுவ வேண்டும். பிறகு சுடு நீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்
- திறந்த வாளிகள் அல்லது பாத்திரங்களை விட, மூடப்பட்ட பாத்திரங்களை பால் கறக்க பயன்படுத்தலாம்
- பால் கறக்கும்போது மாடுகளுக்கு அடர் தீவனத்தினை அளிப்பதால் மாடுகள் பால் கறக்கும்போது அமைதியாக இருக்கும்
- பால் கறந்தவுடன், அதனை நன்றாக வடிக்கட்டுவதால் பாலில் உள்ள தூசுகள் மற்றும் இதர குப்பைகளை நீக்கி விடலாம்
- கடைசியாக பாலை, பால் கேன்களில் ஊற்றி குளிர்ந்த நீரில் வைத்து குளிர்விக்க வேண்டும்
|
|
|